உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



காங்கேசன்துறை கடற்பரப்பில் 118 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இருவரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரும் படகில் பொதி செய்யப்பட்ட 118 கஞ்சாவை கரைப் பகுதிக்கு கொண்டு செல்லும் போது கடற்படையினர் இன்று (11) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கடற்படையினரால், காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்