உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மேற்கு அவுஸ்ரேலியாவில் பல மில்லியன் டொலர் மதிப்புமிக்கதாக கருதப்படும் இரண்டு தங்கத்தினால் கனமான முழாமிடப்பட்ட பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல மில்லியன் டொலர்கள் மதிப்பு கொண்டதாக இருக்கும் என்று சுரங்கத் தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.பாறைகளில் வெளிப்புறத்தில் கனமாக தங்கமுழாமிடப்பட்டுள்ளது. இரட்டை பாறைகளில் ஒன்றின் எடை 95 கிலோ எனவும், மற்றொன்றின் எடை 63 கிலோ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

95 கிலோ எடையுள்ள பாறையில் 2400 அவுன்ஸ் அளவுக்கு தங்கம் உள்ளது என்று கனேடிய சுரங்கத் தொழில் நிறுவனமான ஆர்.என்.சி மினரல்ஸ் தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி பதினொரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்