உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் இன்று பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மலைப்பள்ளத்தாக்கில் அந்த பேருந்து கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்திருப்பதாக மாவட்ட எஸ்பி உறுதி செய்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்