உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாத கருத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் போர்க்காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு பதிலாக புதிய எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

அதன்படி புதிய அரசியலமைப்பு வரைவு நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதனை திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயங்கரவாதம் இல்லாத நிலையில் பயங்கரவாத தடை சட்டம் தேவையற்றது. எனவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் தொடர்ந்து சர்வதேசம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்