உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘சீமராஜா’.சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் முதல்முறையாக அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம், இசை – டி.இமான், எடிட்டிங் – விவேக் ஹர்ஷன், பாடல்கள் – யுகபாரதி, கலை – முத்துராஜ், சண்டைப்பயிற்சி – அனல் அரசு, ஆடை வடிவமைப்பு – அனு பார்த்தசாரதி, எகா லஹானி, நிர்வாக தயாரிப்பு – மாலா மன்யன், தயாரிப்பு – ஆர்.டி.ராஜா, எழுத்து, இயக்கம் – பொன்ராம்.

பொன்ராம் – சிவகார்த்திகேயன் – சூரி – டி.இமான் – பாலசுப்ரமணியம் – விவேக் ஹர்ஷன் என அறுவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்