உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பிலிப்பைன்ஸ் கரையோரப்பகுதியில் மணித்தியாலத்திற்கு 205 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளி வீசும் என்ற எதிர்வு கூறலைத் தொடர்ந்து, நேற்று குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மாத்திரம் குடியிருப்புக்களை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில், தற்போதுஅந்நாட்டின் வானிலை அவதான நிலையத்தினால் நிலச்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கரையோரத்திற்கு சில கிலோமீற்றர் அப்பாலுள்ள குடியிருப்பாளர்களும் தற்போது இடம்பெயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வெளியேறிவரும் மக்களுக்கு பாதுகாப்பான பகுதிகளில் தற்காலிக இருப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த வருடத்தில் இதுவரை மிகவும் கடுமையான 15 சூறாவளிகள் பிலிப்பைன்ஸ் நாட்டினைத் தாக்கியுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சூறாவளி கரையோரப்பகுதியிலுள்ள அனைத்து மரங்களையும் வேருடன் பிடுங்கியெறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்