தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் நள்ளிரவு 12.35 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனால் பீதி அடைந்த மக்கள் தூக்க கலக்கத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.தொடக்கத்தில் மூதூரில் நிலநடுக்கம் உணரப் பட்டது. பின்னர் தோப்பூர், குச்சவெளி, தம்பல காமம் பகுதியில் நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர்.

நிலா வெளி, உவர்மலை, மனையா வெளி, வீர நகர், பிரதான வீதி, ஈச்சலம் பற்று, கட்டை பறிச்சான், திருக்கடலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.நிலநடுக்கம் 2 முதல் 3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

கடலில் அலைகள் அதிகமானதால் தொடக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் விலக்கி கொள்ளப்பட்டது.எனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்