உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளனர்.காலை 10.30 மணியளவில் கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் கார் ஒன்று பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டதனாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அதன்போது காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சிறுவன் ஒருவனும் காரின் சாரதியும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்