உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவுகளில் இன்று அதிகாலை 2.41 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.தெற்கு தீவுகளை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தப்படி வீடுகளை விட்டு வெளியேறினர்.தெருக்களிலும், ரோடுகளிலும் ஓட்டம் பிடித்தனர். அங்கு 6.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆகஸ்டு 19-ந்தேதி பிஜி தீவுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.2 ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

பசிபிக் கடலில் நிலநடுக்க பாதிப்பு மிகுந்த நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவு அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் ஏற்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்