உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.இந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று நேற்று இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது.

சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது திடீரென ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் என்ன ஆனது, அதில் பயணம் செய்த 14 வீரர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. விமானத்தை தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் 4 போர் விமானங்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையில் ரஷ்ய போர் விமானம் காணாமல் போனது. எனவே, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இஸ்ரேல் ஏவுகணைகளை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தும் போது தவறுதலாக ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்