உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான பென்சில்வேனியாவில் உள்ள மாசன்டவுன் பகுதில் டேவிட் சிம்சக் எனும் மாவட்ட நீதிபதியின் அலுவலகம் அமைந்துள்ளது.

எப்போதும் போல அலுவலக வளாகத்தில் அலுவல் வேலையாக நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர். அப்போது நீதிபதியின் அலுவலகத்தின் வெளியே திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இதனால் பதட்டமடைந்த மக்கள் அலுவலகத்துக்கு உள்ளே அலறியடித்து ஓட தொடங்கினர். பின்னர் மர்ம நபரும் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததார்.

இதற்கிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்