Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நாட்டின் சட்டம் ஒழுங்கை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம். இல்லையேல் ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் என யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்பொன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பன பொலிஸாரிடம் உள்ளன.

அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை. யாழில் உள்ள ஆவா குழு போன்ற கோஷ்டிகளை அடக்குவது எமக்கு பெரிய சவால் இல்லை இரண்டு நாட்களுக்குள் அடக்கி விடுவோம்.
பொலிஸாரினால் அவர்களை அடக்க முடியாது என இராணுவத்தின் உதவியை நாடினால் உதவ நாம் தயாராக உள்ளோம்.

தற்போதைய சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தால், இராணுவம் தமிழ் இளைஞர்களை கைது செய்கிறார்கள் என இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். அதனால் பொறுமையாக இருக்கின்றோம்.

அதற்காக தொடர்ந்து இவ்வாறான வன்முறை சம்பவங்களை நாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது.ஜனாதிபதியிடம் யாழில் நடக்கும் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும் என, அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்