உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்பணமோசடி குற்றச்சாட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக், ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
681 மில்லியன் டொலர் நிதியை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை தொடர்பில் அவர்மீது, 21 புதிய குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மலேசிய பிரதி பொலிஸ்மா அதிபர் நூர் ராஸித் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிதியை தவறாக பயன்படுத்தியமை, தனது பதவிக்காலத்தில் முதலீடுகளை தவறாக பயன்படுத்தியமை மற்றும் பெருமளவு சொத்துக்களை சேர்த்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இக்குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து அவரது வீடு முற்றுகையிடப்பட்டு பெருந்தொகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு, கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் நஜீப் ரஸாக்கை கைதுசெய்ததாக பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் முதற்தடவையாக கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பின்னர், மூன்றாவது முறையாக அவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மொத்தமாக அவர் மீது 21 குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவற்றில் 9 குற்றச்சாட்டுக்கள் பணமோசடி தொடர்பானதென்றும், பணத்தை தவறான முறையின் பயன்படுத்தியமை தொடர்பாக 5 குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அரச பணத்தை வேறு தேவைகளுக்காக பரிமாற்றம் செய்தமை தொடர்பாக 7 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.

மலேசியாவின் அபிவிருத்தித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பணத்தில் பல பில்லியன் டொலர் பணம் மாயமாகியுள்ளதாகவும், குறித்த பணக்கையாடலுக்கும் நஜீபிற்கும் வலுவான தொடர்பிருக்குமென்றும் நூர் ராஸித் இப்ராஹிம் மேலும் தெரிவித்துள்ளனார்.

நஜீப் ரஸாக் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் பட்சத்தில், நிதிமோசடிக்கு மாத்திரம் சுமார் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. பணமோசடி மட்டுமன்றி ஏனைய குற்றச்சாட்டுக்களும் அவர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்