உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



லண்டனை சேர்ந்த ஐ.ஏ.ஆர்.எ. என்ற பெயரில் சர்வதேச சாதனை மற்றும் அங்கீகார விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.2014-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்த விஜய் இடம்பெற்றிருந்தார்.மெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

உலக அளவில் விஜய் உள்பட 8 நடிகர்களின் பெயர்கள் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டன.
இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய், தற்போது சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஆர்ஏ அறிவித்துள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்