உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் அமெரிக்கன் டொலர் நிதியுதவியினை வழங்க முன்வந்துள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Brock Biermanக்கும் இடையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே இந்த நிதியுதவி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியை இலங்கையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் செயற்றிட்டத்திற்கு முதலீடு செய்யவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரி, இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.இச்சந்திப்பின் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் திலக் மாரப்பன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்