உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கீத் நொயார் கடத்தல் சம்பவத்திற்கு இராணுவ புலனாய்வுப் பிரிவில் முக்கிய பதவிகளை வகித்தவர்களே கட்டளை பிறப்பித்ததாக சந்தேகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கீத் நொயார் கடத்தப்பட்டபோது சரத் பொன்சேகாவே இராணுவ தளபதியாக செயற்பட்டார். அதனடிப்படையிலேயே பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துவந்த ஊடகவியலாளர் கீத் நொயார், கடந்த 2008ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்