உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’

இதில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலி கான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இசை – ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு – ஸ்ரீகர்பிரசாத், பாடல்கள் – வைரமுத்து, கலை – ‌ஷர் மிஷ்டாராய், சண்டைபயிற்சி – திலீப் சுப்புராயன், எழுத்து – மணிரத்னம், சிவா ஆனந்த், தயாரிப்பு – மணிரத்னம், சுபாஸ்கரன், இயக்கம் – மணிரத்னம்.

“பிரபல நடிகர்-நடிகைகள் கூட்டணி சேர்ந்துள்ள இந்த படம் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. எப்போதுமே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை கொடுப்பவர் மணிரத்னம்.

நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ள ‘செக்கச் சிவந்தவானம்’ அனைவரும் ரசிக்கும் எழில் கொஞ்சும் கதையாக உருவாக இருக்கிறது. இது இயக்குனர் மணிரத்னத்தின் புதிய பரிமாணமாக இருக்கும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்