உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’.இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார்.
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது.

ஒளிப்பதிவு – நட்சத்திர பிரகாஷ், படத்தொகுப்பு – சாபு ஜோசப், சண்டைப் பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், கலை இயக்குநர் – மார்டின் டைட்டஸ், நடன இயக்குநர் – ஜாய் மதி, இசை – ஜெயப்பிரகாஷ், பாடலாசிரியர்கள் – விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி, சாரதி, ரவீந்திரன், ஆடை வடிவமைப்பாளர் – செல்வம், தயாரிப்பு: கே. ரகுநாதன் (ஆர் ஆர் ஃபிலிம்ஸ்), கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மங்களேஸ்வரன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்