Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தேவையான பொருட்கள்:

அவல் – 1 கப்

கேரட் – 2
பட்டாணி – 1/4 கப்
வறுத்த வேர்க்கடலை(கச்சன்) – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை :

கேரட், வெங்காயம், கொத்தமல்லியை  நறுக்கி கொள்ளவும்.

சட்டியை அடுப்பில் வைத்து, அதில் கேரட் மற்றும் பட்டாணியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.பின்னர் அவலை நீரில் போட்டு, ஊற வைக்க வேண்டும்.ஒரு தச்சியைஅடுப்பில் வைத்து,

அதில் எண்ணெய் ஊற்றி  தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்துமிளகாய்தூள்,மற்றும் உப்பு சேர்த்து, மசாலாப் பொருட்கள் காய்கறியுடன் சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.பின்பு ஊற வைத்துள்ள அவலை பிழிந்து, நீரை முற்றிலும் வெளியேற்றிவிட்டு, தச்சியில் போட்டு நன்ற 2 நிமிடம் கிளறி,  வேர்க்கடலையைத் தூவி ஒருமுறை பிரட்டி இறக்கி பரிமாறவும்.

மா

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்