உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே பாராட்டு தெரிவித்துள்ளது.நோர்வேக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கும், நோர்வேயின் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நேற்று(வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போதே நோர்வே வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் தொடர்பான இலங்கையின் முயற்சிகள் சர்வதேசத்திற்கு முன்னுதாரணமாக உள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு நோர்வே தங்களது பூரண உதவியை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இதன்போது நோர்வே தரப்பில் இருந்த பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்