உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ராணுவ மந்திரி ஜேம்ஸ் மட்டிஸ், உளவுத்துறை தலைவர் கிறிஸ்டோபர்ரே, மற்றும் கடற்படை உயர் அதிகாரி ஆகியோருக்கு, கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கடிதம் அனுப்பியவர் முகவரி எதுவும் இல்லை.இதனால் சந்தேகம் அடைந்த உளவுத்துறை அதிகாரிகள் அந்த கடிதத்தை பரிசோதித்தனர்.

அதில் ரிசின் எனப்படும் வி‌ஷம் தடவப்பட்டிருந்தது. எனவே, தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள் உதா மாகாணத்தில் லோகன் நகரை சேர்ந்த வில்லியம் கிளைடே ஆலென் என்பவரை கைது செய்தனர்.
இவர் அமெரிக்க கடற்படையின் மூத்த வீரர் ஆவார். இவர் மீது கசால்ட்லேக் சிட்டி கோர்ட்டில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்