உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘தெற்கின் போராட்டம் ஜனநாயகம் வடக்கின் போராட்டம் பயங்கரவாதமா?’, ‘கைதிகளின் விடுதலையில் தாமதம் ஏன்’?, ‘தமிழ் தலைமைகள் தூங்குகின்றதா?’, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்