உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தென் கொரியாவின், சோல் நகரில், கொயன்கே பிரதேசத்தில் அமைந்துள்ள எண்ணெய் களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த எண்ணெய் களஞ்சியசாலையில் இருந்த தாங்கி ஒன்று வெடித்ததில் சுமார் அதில் இருந்த மூன்று மில்லியன் எண்ணெய் வீணகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்த கொரியா பாதுகாப்பு தரப்பினர், சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரால் அனுப்பப்பட்ட வான வேடிக்கை ஒன்று அப்பகுதியில் விழுந்து வெடித்துள்ளதால் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் அந்த எண்ணெய் தாங்கி வெடித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

27 வயதுடைய இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அங்கு கட்டுமானத் துறையில் பாணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்