உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்த காலமாகவுள்ள நிலையிலும், மக்களின் நில உரிமையை உறுதிசெய்ய இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.‘நாம் ஏன் வீட்டுக்கு செல்ல முடியாது?: இலங்கையில் இராணுவ ஆக்கிரமிப்பில் நிலம்’ எனும் தலைப்பில் 80 பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2018 மே மாதம் வரை பாதிக்கப்பட்ட சமூகத்தினர், ஆர்வலர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 100க்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின்போதும், அதன் பின்னருமான காலப்பகுதியில் பாதுகாப்பு படையினரின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக குறித்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.மேலும், சில காணிகள் தேசிய பாதுகாப்பிற்காக இன்றி, வர்த்தக இலாப நோக்கில் இராணவத்தினால் கையகப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் பின்னர் எவ்வித இழப்பீடும் இன்றி உரிமையாளர்களுக்கு சேதமடைந்த மற்றும் அழிக்கப்பட்ட சொத்துகள் மீளக் கையளிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு உரிமை உண்டு என, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்