உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்உலக நாடுகள் மீது விதிக்கப்படும் தீர்வை வரிகள், பொருளாதாரத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துமென சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீடிக்கும் வர்த்தகப் போர் உலக பொருளாதாரத்தில் பாரிய ஆபத்தையே ஏற்படுத்துமென எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானது. எதிர்வரும் 14ஆம் திகதிவரை குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னதாக வொஷிங்டனில் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.வர்த்தக போரென்பது ஒருபோதும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாதென்றும் அது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்துமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கிடையில் ஆரோக்கியமான போட்டி காணப்பட வேண்டுமென குறிப்பிட்ட அவர், பொருளாதார நெருக்கடிகளுக்கு இணைந்து தீர்வை காண்பது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தொழிநுட்ப துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவது, குறைந்த வறுமானம் கொண்ட நாடுகளின் கடன் பிரச்சினை, அபிவிருத்திக்கு ஏதுவான வழிகளை கண்டறிதல் உள்ளிட்ட பல விடயங்கள் இம்முறை மாநாட்டின் நிகழ்ச்சிநிரலில் உள்ளடங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார உறுதிப்பாடு தொடர்பாக நிச்சயமாக விவாதிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி தீர்வைகளை அதிகரித்த நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் 60 பில்லியன் டொலர் பெறுமதியான இறக்குமதி பொருட்களுக்கு அண்மையில் சீனா வரிவிதித்துள்ளது.

இவ்வாறாக இரு நாடுகளுக்கும் இடையில் நீடிக்கும் வர்த்தகப் போர் உலக நாடுகளின் நாணய பெறுமதியை இழக்க வழிவகுத்துள்ளதோடு, பொருளாதார சிக்கல்களையம் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்