உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நியூயார்க்கின் புறநகர் பகுதியான ஸ்கோஹரீ என்ற இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அவற்றில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்தனர்.திருமண நிகழ்விக்கு சென்ற குழுவினர் பயணித்த சிறப்பு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் குறித்த தகவல்களை தற்போது வெளியிட முடியாது என்றும் நியூயார்க் மாநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அமெரிக்க நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதில் முழு விவரங்களும் வௌியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண குழுவினரின் வாகனம் மலைப்பகுதியில் இருந்து கீழே வேகமாக பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வாகனத்தில் பயணித்தவர்கள் மட்டுமின்றி, அந்த பகுதியில் நடந்து சென்ற பாதசாரிகளும் சம்பவத்தில் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்