உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையின் கடற்பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா நிதியுதவி வழங்கவுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற இந்துசமுத்திர மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வில்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 39 மில்லியன் டொலர்களை அமெரிக்கா இலங்கைக்கு நிதியுதவியாக வழங்கவுள்ளது.
கடற்பாதுகாப்புக்கான ரேடார் கட்டமைப்பை ஏற்படுத்துதல், பயிற்சி வழங்குதல் மற்றும் கண்காணிப்பு கருவிகளை வழங்குதல் போன்ற விடயங்களுக்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சீன அரசாங்கம் கடன் திட்டங்களை வழங்கி வருகின்ற நிலையிலேயே, அமெரிக்க அரசாங்கம் குறித்த நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்