உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


அமெரிக்கா தன்னைக் கொலைசெய்ய முயற்சிப்பதாகவும், அதற்கான ஆணையை கொலம்பியாவிற்கு பிறப்பித்துள்ளதாகவும் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், வெனிசுவேலா மக்களும் கடவுளும் தனக்கு துணையாக இருக்கும்வரை தன்னை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.வெனிசுவேலா தலைநகர் கரகஸில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மதுரோ, அங்கு உரையாற்றிய போது இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-”ஐக்கிய அமெரிக்கா என்னைக் கொலைசெய்ய முடிவுசெய்துள்ளது. மதுரோவை கொலைசெய்ய வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது.

வெனிசுவேலா மக்களும் கடவுளும் எனக்கு துணையாக இருக்கும் வரையில் அமெரிக்காவினால் என் தலையிலிருந்து ஒரு முடியைக்கூட தொடமுடியாது.கொலம்பிய தலைநகர் பொகோடாவில் செயற்படும் ஒரு குழுவிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக, உலகிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

எனினும், அமெரிக்கா தன்னை எதற்காக கொலைசெய்ய முயற்சிக்கின்றது என்ற விடயத்தை மதுரோ குறிப்பிடவில்லை. அதற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்