உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும், திருகோணமலையில் 3 ஏக்கர் காணியும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கான யோசனையை மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த நிலையில், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.மேலும் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள இடங்களில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளவும்,

மீள்குடியேறுவோருக்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இதேவேளை, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று(புதன்கிழமை) மாலை ஜனாதிபதியினை சந்தித்து பேசவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்