உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்விவேக் – தேவயானி இருவரும் வசதியான தம்பதி. தங்கள் மகனை குத்துச்சண்டை வீரராக வளர்க்கிறார்கள். விவேக் மகனின் நண்பர்கள் திறமைசாலிகளாகவும் அதே நேரத்தில் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பணம் இல்லாததால் அகாடமியில் சேரமுடியாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.விவேக்கின் மகன் மாநில அளவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் சாம்பியன் ஆகிறான். ஆனாலும் அவர்களால் மகனின் நண்பர்களை நினைத்து அந்த சந்தோஷத்தை கொண்டாட முடியாத அளவுக்கு சோகத்தில் இருக்கிறார்கள்.

மகனின் விருப்பப்படியே நடுத்தர குடும்பத்து மாணவர்களின் விளையாட்டு கனவை நிஜமாக்க அகாடமி ஒன்றை தொடங்குகிறார் விவேக். விளையாட்டு துறையில் இருக்கும் அரசியல் காரணமாக பல அச்சுறுத்தல்கள் வருகின்றன. அவற்றை இளம் வீரர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை. இசை:கணேஷ் சந்திரசேகர்,ஓளிப்பதிவு:கோபி ஜெகதீஸ்வரன்,இயக்கம்:விபி விஜி

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்