Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வவுனியா, பொது வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலதிக நேரக்கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தியளாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சுகாதார பகுதி உத்தியோகத்தர்கள் இணைந்து ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ‘வழங்கப்படாத கொடுப்பனவை உடனே வழங்கு’, ‘யாருக்காக இந்த மாகாணசபையின் கொடுப்பனவு’, ‘மாகாணசபையின் சேமிப்பு உயர் அதிகாரிகளின் விருந்துக்கா’, ‘அதிகாரிகளின் உதாசீனமா? அரசாங்கத்தின் அசமந்தமா’? என்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை வடமாகாணத்தில் மட்டுமே மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்குவதில்காலதாமதங்கள் காணப்படுவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கான கொடுப்பனவுகளை வழங்காத பட்சத்தில் தாம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடபடுவோமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்