Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கூரை மீது ஏறி 100 இற்கும் மேற்பட்ட கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணி முதல் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விசேட அதிரடி படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமைக் எதிர்ப்பு தெரிவித்தே கைதிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசேட அதிரடி படையினர் சிறைச்சாலையிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் கோரியுள்ளனர்.

கடந்த வாரம் முதல் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்படும் உணவுகள் உள்ளிட்ட பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், இதன்காரணமாக குறித்த பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் அண்மைக்காலமாக குறித்த சிறைச்சாலையில் சட்டவிரோதமான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும், சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விசேட அதிரடி படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை காரணமாக அங்குணுகொலபெலஸ்ஸவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக அங்கு குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவடையும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்