Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சீனாவின் Shandong மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த விபத்திற்கு பின்னர் அதற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைக்கு 300 க்கும் அதிகமானோர் சென்றிருந்ததாகவும் இந்த சம்பவம் இடம்பெற்றபோது அதில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்புக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், 22 பேர் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த சுரங்கத்தின் காற்றோட்ட முறை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளமையால் அவர்களை மீட்பதற்காக சுமார் 140 மீட்பு பணியாளர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து காரணமாக சாலையில் 100 மீட்டர் (328 அடி) நீளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதமும் தெற்கு சீனாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர்.
சீன சுரங்கங்கள், குறிப்பாக நிலக்கரி சுரங்கங்கள் அந் நாட்டின் முக்கிய ஆதார சக்தியாக காணப்படும் அதேவேளை அங்கு இடம்பெறும் அதிக விபத்து விகிதம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்