உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பாகிஸ்தான் லாகூரில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் இவர் பாகிஸ்தானை சேர்ந்த 2 பேரை சுட்டுக் கொன்றார். இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது லாகூரில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவரை விடுதலை செய்யும் படி அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.

ஆனால் பாகிஸ்தான் சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு “ரத்த பணம்” என்றழைக்கப்படும் இழப்பீடு தொகை கொடுத்தால் வழக்கில் இருந்து விடுதலை ஆகலாம். அதன்படி கொலை செய்யப்பட்ட 2 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்க ரேமண்ட் டேவிஸ் ஒப்புக் கொண்டார்.

இதை தொடர்ந்து நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது கொலையுண்ட 2 பேரின் குடும்பத்தை சேர்ந்த 18 பேர் நீதிபதி யூசுப் அஜூலோ முன்பு ஆஜராகி ரத்த பணம் (இழப் பீட்டு தொகை) பெறுவதால் அவரது தவறை மன்னித்து வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்