Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டி இன்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்தோனேசிய ஜகார்தா விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சுமாத்திரா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான விமானத்திற்கு நேர்ந்த உண்மைகளைப் பற்றி அறிவதற்கான ஆதரமான கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஜகார்தாவிலிருந்து புறப்பட்ட புதிய லயன் விமானமானது, கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு 13 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளாகியது.குறித்த விமானத்தில் பயணித்தவர்களில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

இந்நிலையில், பயணம் செய்த 189 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற தினத்திலிருந்து இன்று வரை சுமாத்திரா கடற்பரப்பில் இராணுவ வீரர்களினாலும் சுழியோடிகளினாலும் மீட்புப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன.இந்நிலையில், இன்று விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்