உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


15 Responses to “பண்-கலை பண்பாட்டுக் கழக அறிவித்தல்”

  • amman:

    ஓ!!!!சூலவயிரவா சுற்றிப் பிடியடா கள்ளி முள்ளல இது காஞ்சோண்டிச் சுணையல்ல…
    எனது கோயிலின்பேரால் ஊரைக் கொள்ளை அடிக்கும் கூட்டத்தை கூண்டோடு கைலாசம்
    அனுப்பு,அங்கே இயமன் இருட்டு அறையில் கொதிக்கும் எண்ணையில் குந்தி இருக்க வைச்சு
    கடும் விசாரணை நடத்தி தீர்ப்பு வளங்குவார்.ஒற்றுமையே எங்கள் பலம்.

  • vairavar:

    புலத்தில் அம்மாள் ஆச்சி தன் வேலையை காட்டுகின்றா இது நிஐம்.இதே போல் பல சம்பவங்கள் நடக்கின்றது இவைகள் அம்மாளிடம் இவர்கள் தாங்களாய் வாங்கிய வரமாகும். வயிரவர்

  • அம்மன்::

    தம்பி வைரவா… நான் நீங்கள் சொன்னதை பற்றி அவயளிட்டை கேட்டனான் அதற்கு அவையள் நான் அம்மன் கடவுள் இல்லை என்று சொல்லிப் போட்டாங்கள். இவங்களுக்கெல்லாம் நான் மீண்டும் ஒரு அவதாரம் எடுத்ததான் விளங்கும் போல கிடக்கு

  • vairavar:

    அம்மாளே வந்து கேட்ட கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் உண்டா?எனக்கு தெரிந்தவரை அம்மாளின் காசில் நிறையவீடு வளவு வாங்கின்னாங்கள்.நிறைய ஆபரணங்கள் சேர்த்தனாங்கள், எங்கடை அம்மாளின் நிதி சேகரிப்பவர்கள் நல்லாய் வசதியாய் வாழவைத்தனாங்கள்.இன்னும் அம்மாள் ஆச்சிக்கு சொத்துக்கள் கணக்கிடமுடியாத அளவுக்கு சேர்ப்போம் சேர்க்கப்போகிறோம் சேர்த்துக்கொண்டே இருப்போம். பணிப்புலம் வயிரவர்

  • அம்மன்:

    எனது ஆலயத்துக்கு நிர்வாகிகள் எப்படி தெரிவுசெய்யப்பட்டார்கள்?. பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்டார்களா?பொதுமக்களின் காசினால் இயங்கும் கோயிலென்றால் ஏன் பொதுமக்களால் பொதுவாக நடத்த முடியவில்லை? பூசைசெய்யும் குருக்கள்மாருக்கு ஆலய நிர்வாகத்தினரினால் எவ்வளவு மாதச்சம்பளம் கொடுக்கப்படுகிறது?நிர்வாகத்துக்கு தெரியுமா விபரம்? அல்லது பொதுமக்களுக்கு தெரியுமா விபரம்?அல்லது பொதுமக்கள் எல்லோருக்கும் இந்த விபரங்கள்தெரியக்கூடாதா? கோயில் பொதுவானதா? அல்லது தனிப்பட்டவர்களதா? கோயில் தனிப்பட்டவர்களினது என்றால் ஏன் பொதுமக்களிடம் காசு கேட்க வேண்டும்?எப்போது கோயில் பொதுமக்களின் கையில் வரும்?கோயிலில் சேரும் காசு மூலம் ஊருக்கு இதுவரை என்ன பொதுப்பணி நடந்தது? அல்லது எதிர்வரும் காலங்களில் என்ன பொதுப்பணி நடக்கும்?

  • norway sivasakthebandian:

    போனகிழமையும் உங்களுக்கு தொலைபேசி மூலம் பல விடயமாய் ஆராய்ந்தீர்கள்.பிறகு ஏன் என்னை யார் என அடையாளம் தெரிந்தும் தெரியாதது போல் ஒரு நாடகம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி,பரமபிதாவே, அல்லாவே நீங்கள் மூவரும் துணையே. நோர்வே பண்டத்தரிப்பு வாழ் சிவசக்திபாண்டியன்.

    • Sivanantham.S:

      தம்பி சி.ச.பாவே!
      பொய்யான பல பெயர்களுடன் கருத்துகள் வழங்கும் தங்களுக்கு * முழுப் பூசணிக்காயை சோற்றினுள் புதைப்பது சிரமமான காரியமல்ல.தங்களுடன் என்று, என்ன விடயமாகத் தொலைபேசியில் பேசினேன் என்பதை இணையத்தினூடாக அனைத்து மக்களும் அறியும் வண்ணம் தெளிவுபடுத்த முடியுமா? டென்மார்க்கில் வாழ்ந்துகொண்டு நோர்வேயில் வாழுவதாக கூறுபவரே உங்கள் மனச்சாட்சியிடம் நீங்கள் யாரென கேட்டுப் பாருங்கள்.
      அம்பாளின் அருட்கடாட்சம் தங்களுக்கும் கிடைத்திட தங்கள் மனச் சாட்சியே தங்களுக்கு வழிகாட்டும்.
      நன்றி!

  • norway sivasakthebandian:

    எவர்களால் எப்படி எவரிடமிருந்து ஆலயம் வந்ததோ அதே வழியை கையாண்டு அதே முறையில் மக்கள் மேற்ப்பார்வையில் மக்கள் நிர்வகிக்கும் காலம் வர அம்பாள் ஆச்சி எங்களுக்கு வரம் தந்துள்ளா திரு சி.சிவா அவர்களே உங்கள் கருத்து உங்களுக்கு பிழை என்பதாலேயே மிக ஆவேசமாகவும் அவசரமாகவும் கருத்தை எழுதியுள்ளீர்கள்.அமைதி அமைதி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி சிவா அண்ணா ஓம் சாந்தி சாந்தி.எல்லாம் வல்ல பரமபிதாவே, அல்லாவே எம் மக்களை இந்த வேண்டா எண்ணங்களில் இருந்து பாதுகாப்பாயாக. நோர்வே சிவசக்திபாண்டியன்

    • Sivanantham.S:

      தம்பி சிவசக்திபாண்டியனே!

      நான் இந்த இணையத்தில் ஏதாவது கருத்து எழுதியவுடன் உடனடியாக வந்து மறுப்புக் கருத்து எழுதுகிறீர்கள், சிலவேளைகளில் ” பொல்லாதவன் பண்டதெருப்பு” என்று பெயர் கொடுத்து பயமுறுத்தலாக எழுதிவிட்டு “இப்படிக்கு நோர்வே வாழ் சிவசக்திபாண்டியன்” என்று முடிக்கிறீர்கள். அது மட்டுமன்றி எனது நண்பன் என்றும், என்னுடன் அடிக்கடி பேசுபவர் என்றும் முன்பு ஒரு தடவை இந்த இணையத்தினூடாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் எனக்கு நோர்வேயில் வாழும் அனைத்து எமது மக்களையும் தெரியும். ஆனால் சிவசக்திபாண்டியன் என்பவரை எனக்கு மட்டுமன்றி எமது ஊர் மக்கள் யாருக்குமே தெரியாது . இந்தியாவில் வாழ்கின்ற பிரபல திரைப்பட இயக்குனரும், கதாசிரியரும், கவிஞரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ” சிவசக்திபாண்டியன்” என்பவரைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன். அவரின் பெயரைச் சூடிய தாங்கள் அவரைப் போன்ற தகுதியுடைவராகத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி “பொல்லாதவன்” என்ற திரைப்படத்தின் பெயரை மறு பெயராகச் சூடியிருக்கிரீர்கள். நான் நினைக்கிறேன் தாங்கள் நன்றாகத் திரைப்படம் பார்ப்பீர்கள் என்று. அதுதான் போலும் இன்றைய தமிழ் திரைப்படங்கள் போல வன்முறைகள் நிறைந்த வழியை பின்பற்றுகிறீர்கள் போலும். நோர்வே நாட்டில் வாழ்ந்துகொண்டு, நோர்வே மக்களிடமிருந்து அன்பு, அமைதி சமாதானம், பண்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை என்பவற்றை இதுவரை கற்றுக்கொள்ளாத தாங்கள் நோர்வேயில் வாழ்பவராக என்னால் கருதமுடியவில்லை. தாங்கள் நோர்வேயில் வாழ்பவராகவும் , எனது நண்பனாகவும் இருந்தால் ஏன் என்னுடன் நேரடியாக கதைக்கலாம் தானே. நான் இணையத்தில் எழுதும் விடயங்கள் பற்றி நோர்வேயில் வாழும் ஊர் நண்பர்கள் பலரும் அடிக்கடி தொலைபேசி வாயிலாக தமது அபிப்பிராயங்களை தெரிவித்து என்னை மேலும் ஊக்குவித்துக்கொண்டிடுக்கிறார்கள். தாங்கள் மட்டும் தயங்குவதேன். நான் என்றைக்குமே யாருடனும் வன்முறையை விரும்பாதவன். நான் தங்களுக்கு ஏதாவது தவறு செய்திருந்தால் அதைச் சுட்டிக்காட்டவும். நேரடியாகப் பேசுவதற்கு தங்களுக்கு தயக்கமாக இருந்தால் “sivanantham9@gmail.com” என்ற எனது முகவரிக்கு எழுதினீர்களானால் நான் தவறை உணர்ந்து செயற்ப்பட வழிவகுக்கும். நிச்சயமாக தங்களுடன் வன்முறைக்கு வரமாட்டேன் ,அதுமட்டுமன்றி நாம் இருவரும் நல்ல நண்பர்களாகவும் பழகலாம். தாங்கள் என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வீர்களானால் அம்பாளின் அருட்கடாட்சம் பற்றியும், ஆலயத்தின் மகிமை பற்றியும் விளக்கமாகக் கூறுகிறேன். தங்கள் கருத்துக்கு நன்றிகள் பல.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      உங்களுடைய இரண்டுபேருடைய கடிபிடியும் என்னைபோல் மூன்றாவது நபருக்கு interesting
      ஆகா இருக்கு. உங்களுடைய நீண்ட நாவலை வாசித்தால் யார் உங்களுடைய நெருங்கிய நண்பன் சிவசக்திபாண்டியன் என்று கண்டுபிடிச்சு விட்டீங்கள் என்று. அவரும் இந்த இணையத்தில் ஒரு இடத்தில் அதை தானாகவே காட்டிகொடுத்துவிட்டார்..அவரை அறியாமலே…..உங்கள் இருவரின் கடிபிடி தொடர எனது வாழ்த்துக்கள். ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள்: கொஞ்சம் வாசிக்ககூடிய மாதிரி உங்கள் கருத்துக்களை சுருக்கவும். ஏனென்றால் கடைசி வசனம் வாசிக்கும்பொழுது உங்களுடைய முதல் வசனங்களை மறந்து விடுகிறோம்….
      ஆவேஷ கடிபிடி தொடரட்டும் – எங்களுக்கும் அப்படி இப்படி பொழுதுபோகும்.

  • Sivanantham.S:

    அம்பாள் ஆலயத்திற்கு நிர்வாகமோ? அல்லது மக்கள் ஆதரவோ? இல்லையெனக் கூறும் நண்பர்களே!
    அம்பாள் ஆலயமானது ஒரு சீரான, கட்டுக்கோப்பான, உறுதியான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருக்காவிட்டால் எப்படி, கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கையில் நிலவிய, அசாதாரண போர்ச்சூழலிலும், மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையிலும், எந்தவிதமான ஆரவாரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல், மிகவும் அமைதியாக, மிகச் சிறந்த ஒரு ஆலயமாக, வானுயர்ந்த அழகிய கோபுரத்துடன், எமது ஊருக்கு அழகையும், மக்களுக்கு அம்பாளின் அருளையும் வழங்கிக்கொண்டு மிளிர்கின்றதே இதற்கு யார் காரணம்? மக்களா? அல்லது மாயவிகளா?

    மக்கள் ஆதரவு இல்லாது இருந்ததால், அன்று வருடத்தில் பத்து நாட்களே நடைபெற்ற திருவிழா, இன்று பதினாறு நாட்கள், அதி விமரிசையாக நடைபெறுகிறதே எப்படி சாத்தியமாகும்?
    புது வருடம் பிறந்தவுடன், புலம் பெயர்ந்து வாழும் மக்களெல்லாம் அம்பாள் ஆலயத் திருவிழாவிற்குப் போவதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்குகிறார்களே எதற்க்காக?
    தத்தம் நாடுகளில் வருடாந்தக் கோடைவிடுமுறை கிடைத்ததும், முண்டியடித்துக்கொண்டு, ஊருக்குப் பறக்கிறார்களே எதற்காக?
    இந்த வினாக்களுக்கான விடைகளைத் தேடிப்பாருங்கள், அம்பாள் ஆலயம் மக்களுடையதா? அல்லது மாயவிகளுடையதா? என்பது தங்களுக்குப் புரியும்.

    “தூங்குபவனை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவரை எழுப்புவது மிகவும் சிரமமானதாகும்.” எனவே தங்களுடைய பழமை வாய்ந்த வெறுப்புகளைத் தோளில் சுமந்த வண்ணம் ஒருவழிப் பாதையில் பயணிக்காது, புதுமைகள் படைக்கும் புது எண்ணங்களை தோளில் சுமந்துகொண்டு, மக்களுடன் மக்களாக இருவழிப் பாதையில் தங்கள் பயணத்தைத் தொடங்குங்கள், தங்கள் பயணமும் சுலபமாகும், எண்ணங்களும் நிறைவுறும், ஊரும் சிறப்புறும், மக்களும் மகிழ்வார்கள், தங்கள் உள்ளமும் உவகைகொள்ளும்.

    நன்றி!

  • dheneskanthan:

    இது வரையும் பணிப்புலத்துக்கு சாதித்தது என்ன.எனி மேலும் சாதிக்க இருப்பது என்ன. ஆனால் இங்கு என்ன சாதனை செய்தீர்கள்.ஐரோப்பாவில் பல நல்ல விடயங்களை அலுக்காமல்,சத்தம் செய்யாமல்,செய்கிறார்கள்.ஏன் இங்கு மட்டும் இப்படி ஏன் என தெரியவில்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும். டினேஸ்காந்தன்

  • selvarajah:

    அம்பாள் துணை.
    எல்லோருக்கும் வணக்கம்.
    இந்த விடயத்தை ஆராய்ந்து பார்த்தால் எயமான் கட்டளையை ஏற்க்க மறுத்த்தால் தண்டனை கொடுக்கும் தோரணையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது மாதிரித் தோன்றுகிறது.
    வாசிகசாலை திருத்துவதென்பது உலகெங்கிலுமுள்ள பணிப்புலம் வாழ் மக்கள் சங்கங்களின் கடமையாகும்.யாராவது தனிப்பட்டவர்களின் கருத்த மோதல்களினாலோ, அல்லது பிரச்சனைகளாலோ எடுக்கப்பட்ட முடிவுகளால் சங்கம் அவப்பெயரைச் சுமக்க வேண்டி வரும்.
    ஒரு சங்கமென்பது முளுக்க முளுக்க மக்களின் நன்மை கருதியே செயல்ப்பட வேண்டும்.அதில் மானவமானங்கள் வரும். அதனைப் பொருட்ப் படுத்தாமல் எடுத்த முடிவுகளை மாற்றாமல் கதைத்துப்பேசிச் சமாதானத்துக்கு வரவேண்டுமே தவிர, எடுத்தேன் கவுட்டேன் என்று முடிவுகளை எடுக்கக் கூடாது.
    முடிவுகள் எடுக்குமுன்பு சம்பந்தப்பட்டர்களோடு கதைத்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றபின்பு சங்கத்தில் முடிவுகளை எடுக்கவேண்டுமே தவிர சங்கம் எடுத்த முடிவுக்கு வா.நிர்வாகத்தை இணங்க வேண்டும் என்று (வற்புறுத்தவது)கேடப்பதில் என்ன நியாயம்?
    அதனைக்கூட ஊரில் இருப்பவர்களைக் கூப்பிட்டு இருசாராரோடும் கதைத்து ஆற அமர ஒரு தடைக்குப்பல தடவைகள் கதைத்து முடிவெடுக்காமல் யாருடைய கோபத்தினாலோ,தூண்டதலினாலோ அவசரவசரமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
    இந்தப் பிரச்சனையால்
    சிலவருடங்களாக அம்மன் கோயலில் நல்ல முறையாக நடந்துகொண்டிருக்கும் அன்னதானத்துக்குப் பங்கம் வராமல்ப் பார்க்கவேண்டியதும் சம்பத்தப்பட்டவர்களின் கடமையாகும்.
    தவறிருந்தால் மன்னிக்கவும்.
    பிரியமுடன் பணிப்புலத்து இராசன்

  • நலன் விரும்பி:

    திரு.பாலகுமார் அவர்களின் கேள்வி நியாயமானதே.

    மேற்படி ஆலயத்தின் உரிமையாளர்கள் என்று தம்மை அழைப்பவர்களை நிர்வாகிகள் என்று நீங்கள் அங்கீகரித்து இந்த அறிக்கையில் அழைப்பது எந்தவகையில் பொருந்தும். தயவு செய்து இதன் விளக்கத்தை நீங்கள் தருவீர்கள் என்று எதிர்பாக்கும் நலன்விரும்பி.

    இவர்கள் எப்படி இந்த ஆலயத்தின் உரிமையாளர்கள் ஆனார்கள்.. மறந்து விட்டீர்களா…

  • T.BALA. pannipulam:

    பண் கலை பண்பாட்டு கழகம் கனடாவின் அறிக்கை வரவேற்க்கேற்க்கதக்கதே.உங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படையாக அறிவத்துள்ளதால்.உங்கள் நிர்வாகத்திற்க்கும் குளப்பம் இல்லை மக்களும் தெளிவாகிவிடுவார்கள்.நீங்கள் குறிப்பிட்ட ஒரு விடயம் அதாவது ஆலயநிர்வாகம் என்பது பணிப்புலம் அம்பாள் ஆலயத்துக்கு இல்லையே? இல்லாத ஒன்றை இருப்பது என எழுதியுள்ளீர்கள் அப்படி இருந்தால் எப்போ? எந்தமக்களால்? எப்படி? என விளக்கவும். நிர்வாக உறுப்பினர்கள் யார் அவர்கள் என தெரிந்தால் நாமும் ஆலயத்துக்கு உதவி செய்யும்போது தொடர்புகள் கொள்ளவசதியாக இருக்கும். பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்