உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிற்கும், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதன்போது, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸிற்கும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நாடாளுமன்றத்தினை கூட்டவேண்டியதன் அவசியத்தை சபாநாயகரிடம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்