Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களை அமைச்சு பொறுப்புகளை பெற்றுக் கொண்டு எங்களுடன் இணைந்து செயற்படுங்கள் அல்லது பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ள வாக்களிப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நடு நிலைமை வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (07) காலை 9 மணி அளவில் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் முற்போக்குக் கூட்டணியை சந்திக்க வேண்டுமென்ற வேண்டுகோளுக்கிணங்க இன்று காலையில் நாங்கள் அவரை சந்தித்தோம். இதன்போது இன்றைய அரசியல் நிலைமை தொடர்பாக மிகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களிடம் எங்களை அமைச்சு பொறுப்புகளை பெற்றுக் கொண்டு எங்களுடன் இணைந்து செயற்படுங்கள் அல்லது எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்களிக்கின்ற சந்தர்ப்பத்திலே தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை எங்களிடம் விடுத்திருந்தார்.

ஆனால் நாங்கள் அவரிடம் தெளிவாக தெரிவித்திருந்தோம். இந்த நாட்டிலே ஜனநாயகத்திற்கு விரோதமாக அல்லது ஜனநாயகத்தை பழுதடைய செய்வதான விடயங்களுக்கு அல்லது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து தனிப்பட்டவர்கள் எடுக்கும் முயற்சிக்கு எந்த ஒரு காரணம் கொண்டும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சி என்ற வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி அதற்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்காது.

எனவே நாங்கள் அந்த வாக்களிப்பின்போது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடுகளுக்கு எதிராக வாக்களிக்க இருக்கின்றோம் என்பதை ஜனாதிபதியிடம் தெளிவாக தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியை பொறுத்த வரையிலே எங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த இரண்டு கட்சிகளுமே எந்த கட்சி நாட்டை ஆட்சி செய்தாலும் நாங்கள் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில் எங்களுடைய மக்களுக்கு எவ்வாறான சேவைகளை செய்ய வேண்டுமோ அதற்கு ஏற்ற முடிவெடுத்து நாங்கள் எங்களுடைய மக்களுக்கு என்னென்ன சேவைகளை முன்னெடுக்க முடியுமோ அதனை முன்னெடுப்போம்.

ஆனால் ஜனநாயகத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் அல்லது ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படுகின்ற செயல்பாடுகளுக்கு எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் ஒரு நாளும் துணை போக முடியாது.

தமிழ் முற்போக்கு கூட்டணியை பொறுத்தளவில் நாங்கள் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள் சிறுபான்மை மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டே இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வாக்களித்தார்கள்.

ஆனால் அந்த ஜனநாயகம் இப்பொழுது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. அதற்கு காரணம் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானங்கள். எனவே இந்த தீர்மானத்தை அவர் எப்படி எடுத்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

காரணம் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் கொண்ட ஒரு அரசாங்கம் அமையும் எனவும் அந்த அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் நாட்டில் இருக்கின்ற வடகிழக்கு தமிழர் பிரச்சினைகள் உட்பட மலையக மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் அதற்காகவே அன்று நாங்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்தோம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் எனவே எங்களுக்கு வாக்களித்த மக்கள் அதனையே எதிர்பார்த்தார்கள்.

இன்றைய சூழ்நிலையில் நிலைமை முழுமையாக மாற்றம் அடைந்திருக்கிறது. உங்களுக்கு வாக்களித்த மக்களின் எண்ணத்திற்கு மாறாக ஜனநாயக விரோத செயல்பாடாக இன்று பல செயல்பாடுகள் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை எந்த வகையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாளை புதிதாக ஜனநாயக ரீதியாக ஒரு பிரதமர் தெரிவு செய்யப்பட்டாலும் அவருக்கு இந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காகவே நாங்கள் இந்த செயற்பாட்டிற்கு விரோதமாக வாக்களிக்க தீர்மானித்திருக்கின்றோம்.

எத்தனை குற்றங்கள் இருந்தாலும் அவருக்கு எதிராக ஜயநாயக ரீதியில் செயற்பட வேண்டும் தவிர இப்படி செயற்படுவதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், மயில்வாகனம் திலகராஜ், அ.அரவிந்தகுமார் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்