Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மதுரையில் தீவிரமான, வெறித்தனமான, பக்தியான அஜித் ரசிகராக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். பில்லா படம் ரிலீசுக்கு பிறகு தனது பெயரை பில்லா பாண்டி என மாற்றிக் கொள்கிறார். அஜித்தை போற்றிப் பாடும் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

இவரது முறைப்பெண் சாந்தினி தமிழரசன். ஆர்.கே.சுரேஷும், சாந்தினியும் ஒருவர் மேல் ஒருவர் பிரியமாக இருக்கிறார்கள். கட்டிட தொழிலில் வரும் பணத்தையெல்லாம் ரசிகர் மன்றத்தின் மூலம் உதவி செய்வது வருவதால் சாந்தினியை, ஆர்.கே.சுரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் மாரிமுத்து.

ஆர்.கே.சுரேஷ் காண்ட்ராக்ட் எடுத்து கட்டும் வீட்டுக்கு சொந்தக்காரரான இந்துஜாவுக்கு சுரேஷ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் ஆர்.கே.சுரேஷோ இந்துஜாவை கண்டுகொள்ளாமல், சாந்தினியையே காதலிக்கிறார்.

இந்த நிலையில், இந்துஜாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க, அனைவர் முன்பும் இந்துஜா, தான் ஆர்.கே.சுரேஷை காதலிப்பதாக கூறுகிறார். இதற்கிடையே ஒரு விபத்தில் இந்துஜாவின் வீட்டார் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இந்துஜா மனநிலை பாதிக்கப்படுகிறார்.

தனது குடும்பத்தை இழந்த இந்துஜாவை தனது பொறுப்பில் கவனிக்க ஆரம்பிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதனால் இவருக்கும், சாந்தினிக்கும் இடையே பிரிவு வருகிறது.

கடைசியில், ஆர்.கே.சுரேஷ் காதல் என்ன ஆனது? இருவரில் யாரை கரம்பிடித்தார்? இந்துஜா பழைய நிலைமைக்கு திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.இயக்ம்: ராஜ் சேதுபதி,இசை:இளையவன்,ஓளிப்பதிவு:ஜீவன்,

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்