Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பாகற்காய் காரக் குழம்பு

தேவையான பொருட்கள் :

பாகற்காய் – 300 கிராம்,

வறுத்த வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் – 200 கிராம்,
நல்லெண்ணெய் – 50மி.லி.,
தக்காளி – 2,
புளி – எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு – தேவைக்கு,
நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 1½ டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 100 கிராம்.

செய்முறை :
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி  நறுக்கி கொள்ளவும்.புளியை கரைத்து கொள்ளவும்.தக்காளியை நறுக்கி கொள்ளவும்.பாகற்காயின் விதைகளை நீக்கி  நறுக்கிக் கொள்ளவும்.சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைக்கவும்.சட்டியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.நன்றக வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு,  மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.பின் அரைத்த விழுது, கொஞ்சம் தண்ணீ விட்டு கொதிக்க விடவு குழம்பு திக்கான பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்