Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தெற்கு கலிபோர்னியாவில் உள்ள  மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன்  மதுபான விடுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. மதுபான விடுதிக்குள் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் சுட்டுள்ளான். இதில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று  மதுபான விடுதியை சுற்றி வளைத்தனர். அங்கு துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்