உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்சொந்த நாட்டு மக்களை கொடுமைப்படுத்தும் லிபிய அதிபர் கடாபி ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சில் ஆதரவு தெரிவித்தது.
வான் வழியாக லிபிய ராணுவம் குண்டுகளை வீசுவதைத் தடுக்கவும், அந்த வான் பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கவும் முடிவு செய்தது.

லிபியா வான் எல்லையில் விமானம் பறக்க தடை விதிக்கும் முடிவில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர்களில் 10 உறுப்பினர் ஆதரவு தெரிவித்தனர். 5 உறுப்பினர் நாடுகள் வாக்களிக்கவில்லை.

லிபியா ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சியாளர் போராட்டம் கடுமையாக இருந்த போதும் கடாபியின் படைகள் போராட்டக்காரர்களிடம் பல நகரங்களை தற்போது கைப்பற்றி உள்ளன. ஐ.நா வின் முடிவை கேட்ட பெங்காசியில் உள்ள போராட்டக்காரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

ஆனால் லிபியா அரசு செய்தித் தொடர்பாளர் ஐ.நா வின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். போராட்டக்காரர்களின் ஆதிக்க இடமாக உள்ள பெங்காசி லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

லிபியா மீது விமானம் பறக்க தடை விதிப்பது தொடர்பான வாக்கெடுப்பு நடந்த பின்னர் யு.எஸ் ஜனாதிபதி பாரக் ஒபாமா அடுத்த கட்ட நடவடிக்கையை ஆலோசிக்க பிரான்ஸ், பிரிட்டன் தலைவர்களை அழைத்தார். ஐ.நா வின் தீர்மானத்திற்கு லிபியா உடனடியாக கட்டுப்பட வேண்டும் என அவர்கள் கூறினர்.

லிபியா மீது அமெரிக்கா உடனடியாக தாக்குதல் நடத்தும் நிலையில் இல்லை. ஆனால் அரபு கூட்டாளிகள் உதவியுடன் பிரான்ஸ், பிரிட்டன் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்