Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



33ஆவது ஆசியான் மாநாடு சிங்கப்பூரில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று ஆரம்பமாகிய குறித்த மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் ஆசியான் நாடுகளின் தலைவர்களும் வர்த்தக தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இம்மாநாட்டில் சிங்கப்பூர் பிரதமர் லீ செயென் லூங், சீனப் பிரதமர் லீ கெகியாங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இம்மாநாட்டிற்கு இம்முறை சிங்கப்பூர் தலைமையேற்றுள்ளதோடு, அந்நாட்டிற்கு இது ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

இம்மாநாட்டின் முதற்கட்டமாக பிராந்திய பொருளாதாரம் தொடர்பாக ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. அத்தோடு, இணைய வர்த்தகத்தை மேம்படுத்துதல் தொடர்பாக அதிக கவனஞ்செலுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் அதியுச்ச நிலையை எட்டுவதே ஆசியானின் முக்கிய இலக்காக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை இம்மாநாட்டை முன்னிட்டு சிங்கப்பூரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுமார் 5000 பாதுகாப்புத் தரப்பினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்