Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அனைத்து துறைகளிலும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் உறுதியளித்துள்ளன.சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஆசியான் மாநாட்டின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) சீன, ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போது கருத்து தெரிவித்த சீன பிரதமர் லீ கெக்கியாங், ”அதிகரித்துவரும் பாதுகாப்புவாதத்திற்கு உலகம் முகங்கொடுத்து வருகிறது. இந்நிலையில், சிக்கலான இந்த உலக நிலைமையை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு, பன்முகத்தன்மை மற்றும் சுதந்திர வர்த்தகத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், ”ஒற்றுமையின் சக்தியுடன் கொரிய தீபகற்பத்தின் சிக்கல்களை எதிர்கொண்டு, சமாதானத்தை நோக்கிய புதிய சகாப்தத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த தருணத்தில் எமது சமூகத்தின் உண்மையான அபிவிருத்திக்காக போராடிய கிழக்காசிய தலைவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், நிதி, பாதுகாப்பு, கல்வி, கலாசாரம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், ஜப்பானை சென்றடைந்தவுடன் குறிப்பாக சுற்றுச்சூழல், பேரனர்த்த குறைப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்தும் கவனம் செலுத்துவதாகவும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்