Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் பிரெக்சிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறி பிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் (Dominic Raab) பதவி விலகியுள்ளார்.
இன்று நான் பிரெக்சிற் அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறேன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான எங்கள் ஒப்பந்தத்திற்காக முன்மொழியப்பட்ட வரைவிற்கு சரியான மனநிலையுடன் என்னால் ஆதரவளிக்கமுடியாது என அவரது சமூக வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அமைச்சர்களுடனான ஐந்து மணிநேர சந்திப்பிற்குப் பின்னர் பிரெக்சிற் ஒப்பந்த வரைவிற்கு அமைச்சரவை ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்திருந்தார். ஆனாலும் பல சிரேஷ்ட அமைச்சர்கள் இவ்வொப்பந்த வரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பிரதமர் தெரேசா மே மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது தொடர்பாகவும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களிடையே விவாதம் நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் பதவிவிலகியதன் பின்னர் டொமினிக் ராப் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அத்துடன் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்த வரைவை தயாரிப்பதிலும் டொமினிக் ராப் முக்கிய பங்குவகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்