Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சி.என்.என். செய்தியாளருக்கு மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற, இடைத் தேர்தலில், அவரது குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது.
இதன்பிறகு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், சி.என்.என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா, மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்க தெற்கு எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து அடுத்தடுத்து கேள்விகளை கேட்க, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் செய்தியாளர், ட்ரம்புடனும், வெள்ளை மாளிகை உதவியாளருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் பின்னர், செய்தியாளர் ஜிம் அகோஸ்ட்டா வெள்ளை மாளிகையில் நுழைவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்jநிலையில், வெள்ளை மாளிகையில் அனுமதி ரத்து செய்யப்பட்டமைத் தொடர்பான வழக்கு வொஷிங்டன் பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, சி.என்.என். செய்தியாளருக்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு வெள்ளை மாளிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து வொஷிங்டன் நீதிமன்றத்தில் வெள்ளை மாளிகை சார்பில் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஜிம் அகோஸ்டாவுக்கு மீண்டும் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என்ற உத்தரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன் வெள்ளை மாளிகை நிர்வாகம் பத்திரிகையாளர் உரிமைகளை மீறி செற்படுவதாகவும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்