தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


துருக்கி துணைத் தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் தகவல் வெளியிடப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மாலிபு நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து வௌியிட்ட அமெரிக்க ஜனாதிபதி , ஜமால் கஷோக்கியை கொன்றது யார், எப்படி கொல்லப்பட்டார் என்பது தொடர்பான முழு விபரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் பகிரங்கப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான அறிக்கை சி.ஐ.ஏ மூலமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமக்கு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வௌியிட்டார். எனினும், அறிக்கையை யார் ஒப்படைப்பார் என்பது குறித்த தகவலை அவர் வௌியிடவில்லை.

அறிக்கை கிடைத்த பின்னர் யார் அவரை கொன்றார்கள் என்பது குறித்து முழுமையான விளக்கத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், அவரது உயிரிழப்பு ஒட்டு மொத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் கஷோக்கிக்கு மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ. நேற்று குற்றஞ்சாட்டியிருந்தது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர். இந்நிலையில், அவரது உத்தரவின்றி எந்த காரியமும் நடக்க முடியாதென சி.ஐ.ஏ. உயரதிகாரியொருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்