உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


லிபியாவில் கடந்த பல நாட்களாக அதிபர் கடாப்பி பதவி விலக வேண்டும் என்று பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் மக்கள் ஆதரவு புரட்சி படையினர் கைப்பற்றியிருந்த 5 நகரங்களில் நான்கை கடாபி ஆதரவு படையினர் மீட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன . இது குறித்து , லிபியா குறித்த ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. இதில், கடாபி உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அங்குள்ள மக்களை பாதுகாக்க மற்ற நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், பொதுமக்கள் பகுதிகளில் போர் விமானம் பறக்க தடை விதிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஐ.நா.தீர்மானத்தை கடாபி ஏற்க மறுத்தால் உடனடியாக தாக்குதல் நடக்கலாம் என்ற நிலை உருவானது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்த மிரட்டல் தீர்மானத்தையடுத்து, லிபியா அதிபர் கடாபி பணிந்தார். உடனடி போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த லிபியா அயலுறவுத் துறை அமைச்சர் மெச்ச கூச்ச , ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் காரணமாக அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்