உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெங்காஸி நகரை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் அரச படைகள் கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளன.
நேற்றைய தினம் பெங்காஸி நகரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அரச படையினர் தற்போது இருபது கிலோமீட்டர் வரை நெருங்கி வந்து விட்டதாக கிளர்ச்சிப் படையின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்குலக படைகள் தொடர்பாக தமக்கு அறவே நம்பிக்கையில்லை என்றும் கிளர்ச்சியாளர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கிடையே பெங்காஸி நகரில் யுத்த விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டதை சர்வதேச செய்தியாளர்கள் கண்டுள்ளனர். கிளர்ச்சிப் படையினரே அதனை வீழ்த்தியதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

லிபியாவின் அண்மைய நிலவரம் பற்றி அமெ ரிக்கா தனது நேச நாடுகளுடன் கலந்தாலோசனை செய்துள்ளது.

பாரிஸ் நகரில் பிரஸ்தாப கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகளின் பிரதிநிதிகள் பிரஸ்தாப கலந்துரையாடல்களில் பங்கு கொண்டிருந்தனர்.

லிபியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள அமெ ரிக்க அதிபர் பராக் ஒபமா, ஆயினும் தாக்குதலுக்கு அமெ ரிக்கா தலைமை வகிக்காது என்றும் தெ ரிவித்துள்ளார்.

ஆயினும் மேற்குலகின் தீர்மானம் நவ காலனித்துவ வாதம் என்று கடாபி கடுமையாகச் சாடியுள்ளதாக அல் ஜெசீரா ஊடகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்