Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கனகராயன்குளம் பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்ட சோதணையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி 13 கிலோ கிராம் கஞ்சாவினை கெப் ரக வாகனம் ஒன்றில் கடத்த முற்பட்ட போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கேரள கஞ்சாவினை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள விநியோகத்தர் ஒருவரிடம் இருந்து கொள்வனவு செய்து புத்தளத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்